உலக நாடுமக்களின் பார்வையில் கொரோனா
பல்துறைகளின் வளர்ச்சிக்கும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் அடிப்படையான கல்வி, செல்வம் மற்றும் வீரத்திற்கு தற்போது குறைவில்லை என்ற எண்ணத்தோடு செயல்பட்ட உலக நாடுகளின் மகிழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உயிர்கொல்லி தொற்றுநோய் கொரோனா என்ற வைரஸின் மூலமாக உருவெடுத்தது.
வளர்ந்து வரும் நாடுகள் வல்லரசு நாடுகள் என்ற வேறுபாடு இல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக சீர்குலைக்கும் வகையில் தனது வீரியத்தை கரோனா வைரஸ் வெளிப்படுத்தியது.வைரஸ் எங்கிருந்து பரவியது?, எப்படி பரவியது?, ஏன்?எதற்காகப் பரவியது? என்றெல்லாம் ஆராயத் தொடங்கி பின் உரிய மருந்து தற்போது வரை கண்டுபிடிக்கப்படாத காரணத்தால் முதலில் முன்னெச்சரிக்கையோடு உயிரைக் காத்துக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்தை பலரும் உணரத் தொடங்கினர்
உலக அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட நாடுகளில் வாழும் மக்கள் ஊரடங்க உத்தரவால் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். இந்நிலையில் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் செலவு செய்யும் நிலை உருவாகியுள்ளதால் தேவையின்றி செய்யப்படும் ஆடம்பரச் செலவுகளைப் பற்றி மக்கள் அறிந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பாகவும் கருதப்படுகிறது. மற்றொறு வகையில் அத்தியாவசியத் தேவைகளையே பூர்த்தி செய்ய இயலாமல் தவிக்கும் மக்களுக்கு உதவி மனிதம் போற்றும் பண்பையும் வெளிப்படுத்துகிறது.
பல நாடுகளில் 60 வயதிற்கும் அதிகமான மக்களைத் தாக்கும் கரோனா இந்தியாவில் மட்டும் 21-40வயது வரையிலான இளைஞர்களை அதிகமாக தாக்கியுள்ளது என்ற Union health ministry அறிவிப்பு பலரை வியப்படையச் செய்கிறது.கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை புதைக்க இடமில்லை என்ற தகவல்கள் கண்ணீரைத்தான் நினைவூட்டுகிறது.இது போன்ற பல வரலாறு காணாத துயரச் சம்பவங்களுக்கு இடையில் இந்தியாவின் ராய்ப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் இன்னல்களைத் தாண்டி குணமுடன் பிறந்த இரட்டை ஆண் மற்றும் பெண் குழந்தைக்கு கரோனா, கோவிட் என அவர்களின் பெற்றோர் பெயரிட்டனர்.
இத்தகைய உயிர்கொல்லி தொற்றுநோய் தற்போது கற்றுக் கொடுக்கும் பாடங்களைக் கொண்டு இனிவரும் காலங்களிலும் எச்சரிக்கையோடு செயல்படுவதோடு தற்போது அரசின் உத்தரவைக் கடைப்பிடித்து கரோனா நோய்த்தொற்று பரவாமல் நம்மைக் காத்துக் கொள்வதே தலையாய கடமை
No comments:
Post a Comment